டெல்லியில் 2 மாத குழந்தையை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
டெல்லியை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 17. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒருவருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது தம்பதியினருக்கு இரண்டு மாத குழந்தை ஒன்று உள்ளது. ஆனால் அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என மனதளவில் கருதி வந்திருக்கிறார் குமார். மனைவி லதாவிற்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த குமார், அந்த ஆணுக்குதான் இந்த குழந்தை பிறந்ததாக கடுமையாக சந்தேகம் அடைந்துள்ளார். அதனால் அந்த குழந்தையை பார்க்கும் நேரமெல்லாம் குமாருக்கு தேவையில்லாத மன உளைச்சலும், ஆத்திரமும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மனைவி வீட்டிலிருந்து வெளியே சென்ற சமயம் பார்த்து, இரண்டு மாத குழந்தை என்றும் பாராமல் குழந்தை முகத்தின் மீது கடுமையாக குத்தியிருக்கிறார். குழந்தை வலியால் அழுதும், இரக்க குணம் இல்லாத குமார் மீண்டும், மீண்டும் குத்தியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
வெளியே சென்ற லதா வீடு வந்த பார்த்தபோது குழந்தை அசைவின்றி கிடந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தனது கணவர் மீது லதா அளித்த புகாரின் அடிப்படையில் குமாரை போலீசார் கைது செய்தனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்