அரிசி கடையில் 130 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணம் கொள்ளை

அரிசி கடையில் 130 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணம் கொள்ளை

அரிசி கடையில் 130 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணம் கொள்ளை

அரிசி கடையில் இருந்த லாக்கரை உடைத்து 130 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணம் கொள்ளை அடித்துசென்றுள்ளனர்.

மதுரை அரசரடி பகுதியில் வசிப்பவர் ஜெகன். இவர் அரிசி கடை வைத்து மொத்த வியாபாம் செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு சென்றார். இந்னிலையில் இன்று காலை 9 மணிக்கு கடையை திறந்த பொழுது கடையின் ஜன்னலை உடைத்து ,கடையிலிருந்த இரும்பு பெட்டகத்தில் வைத்திருந்த 2 லட்சம் பணம் மற்றும் 130 சவரன் தங்க நகை கொள்ளை போய்யிருப்பதை கண்டு அதிர்ந்து போய்விட்டார். நகை பணம் திருட்டு குறித்து எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் ஜெகன் புகார் தெரிவித்தார். தகவலரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.எஸ் காலணி போலீசார் , கொள்ளை சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர். கடையில் வேளை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏதேனும் இந்த குற்ற சம்பவத்தில் தொடர்பு உள்ளதா . கடையில் நகை வைப்பதற்கு அவசியம் என்ன என பல கோனங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர் . சம்மந்தப்பட்ட கடையில் கண்காணிப்பு கேமரா இல்லாதது போலீஸார் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது .மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையிளர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com