Published : 21,Apr 2018 01:00 PM

வன்முறையில் முடிந்த போராட்டம்: ஆணி வேராக இருந்த வாட்ஸ்அப் அட்மின்கள் அதிரடி கைது

Five-whatsapp-admin-arrested-in-Kerala

கேரளாவில் கத்துவா சிறுமி வன்கொடுமைக்கு எதிராக அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து போராட்டத்திற்கு வேராக இருந்த வாட்ஸ்அப் அட்மின்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கேரளாவில் கடந்த 16ம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் போராட்டம் சில இடங்களில் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்கள் பலர், கடைகளை மூடுமாறு பல இடங்களில் நிர்பந்தித்துள்ளனர். பேருந்துகளில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதோடு ஒரு சில இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் குறித்து மக்களுக்கும் பெரியளவில் எந்த விஷயமும் தெரியாத நிலையில் அவர்களும் கடுமையாக சிரமப்பட்டனர்.

இந்நிலையில் போராட்டத்திற்கு காரணமாக இருந்த வாட்ஸ்அப் அட்மின்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘வாய்ஸ் அப் யூத்’  என்ற வாட்ஸ்அப் குரூப் மூலமாகத்தான் போராட்டம் குறித்த செய்தி பரவியிருக்கிறது. வாட்ஸ் அப் மூலமாகத்தான் போராட்டக்காரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். எனவே இதற்கு காரணமான வாட்ஸ்அப் அட்மின்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ்சில் முன்னாள் உறுப்பினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்