Published : 21,Apr 2018 05:21 AM

பாலியல் வன்கொடுமைக்கு பலியான 8மாத குழந்தை: ம.பி.யில் நடந்த கொடூரம்

8-Month-Old-Girl-Raped--Killed-In-Indore-Basement--Suspect-Seen-On-CCTV

மத்தியப் பிரதேசத்தில் 8 மாத குழந்தை பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில இந்தூரை சேர்ந்த பலூன் வியாபாரி தனது மனைவி மற்றும் 8 மாத மகளுடன் சாலையில் படுத்து உறங்கியுள்ளார். வண்ணமயமான பலூன்களை விற்றாலும் அவரது வாழ்க்கை வண்ணமயமாக இல்லை. குடித்தனம் செய்ய வீடு இல்லாததால் சாலையில் கிடைக்கும் இடங்களில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு தனது மகள் மற்றும் மனைவியுடன் ராஜ்வாடா ஃபோர்ட் பகுதியில் உறங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது தனது 8 மாத குழந்தை காணவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.


இந்நிலையில் அப்பகுதியில் கடை நடத்தும் ஒருவர் தனது கடையின் கீழ்த்தளத்தில் குழந்தை சடலமாக இருப்பதைக் கண்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பலூன் வியாபாரியின் குழந்தை என தெரிய வந்தது. குழந்தையின் உடலில் காயம்  இருந்தது இதன் மூலம் பாலியல் வன்புணர்வுக்கு குழந்தை ஆளாகியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சுமார் காலை 4.45 மணிக்கு ஒரு வாலிபர் குழந்தையை தனது தோளில் தூக்கிக்கொண்டு கடையின் கீழ்தளத்திற்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரித்ததில் அந்த இளைஞர் இரவில் பலூன் வியாபாரியின் உறங்கிய இடத்திற்கு அருகில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அந்த இளைஞரின் பெயர் சுனில் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, சாலை ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை அந்த குடும்பத்தினருக்கு தெரியாமல் சுனில் என்ற இளைஞர் தூக்கிச் சென்றுள்ளார். அவர்கள் இருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடையின் கீழ்த்தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.கடைக்காரர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டோம்.குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தது.குழந்தை மேல் இருந்து தூக்கி விசப்பட்டிருக்கலாம்.இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக குழந்தை உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்