'எங்கள் அணியில் உள்ள பெரும்பாலானோர் 30 வயதை கடந்தவர்கள். அதனால் உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறினார்.
ஐபிஎல் தொடரில் புனேவில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய சிஎஸ்கே, 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி சதமடித்தார். 57 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் உட்பட 106 ரன்கள் விளாசினார். சுரேஷ் ரெய்னா 46 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன் எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது.
வெற்றிக்குப் பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ‘வழக்கமாக சேஸிங் செய்து வெற்றி பெறுவோம். இந்தப் போட்டியில் நாங்கள் முன்னிலை வகித்தோம். அணியில் உள்ள பெரும்பாலானோர் 30 வயதை கடந்தவர்கள். அதனால் உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சென்னைக்குப் பதிலாக புனே மைதானத்தில் விளையாடினோம். இங்கும் ஏராளமான ரசிகர்கள் எங்களை உற்சாகப்படுத்தினர். நான் புனே அணிக்காக இங்கு விளையாடிய போது எங்களை உற்சாகப்படுத்தியவர்கள் இவர்கள். அதற்கு இப்போது கைமாறு செய்திருக்கிறோம் என்று சொல்லலாம். இது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. புனே சூப்பர் கிங்ஸ் அல்ல. இருந்தாலும் இங்கு ஏராளமான மஞ்சள் நிறத்தைக் காணமுடிகிறது.
இந்த பிட்ச் பற்றி நூறு சதவிகிதம் உறுதியாக சொல்ல முடியவில்லை. பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களுக்கான பணியை இந்தப் போட்டியில் எளிதாக்கிவிட்டனர். சேஸிங் செய்யும் போது முதல் ஆறு ஓவர்கள் முக்கியம். இங்கும் கொஞ்சம் பனி இருந்தது. பிட்ச் நன்றாக இருக்கும்போது எந்த அணியும் முதலில் பேட்டிங் செய்வதற்கு தயங்குவது இல்லை’ என்றார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற, சதமடித்த ஷேன் வாட்சன் கூறும்போது,’ராஜஸ்தானுக்கு எதிராக கொஞ்சம் அதிக உந்துதலோடு ஆடினேன். சிஎஸ்கேவுக்காக ஆடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறேன். கேட்ச் டிராப் ஆனது பற்றி கேட்கிறீர்கள். விளையாட்டில் இது சகஜம். இருந்தாலும் இந்தப் போட்டியில் எனக்குச் சாதகமான நிகழ்வுகளும் நடந்தன.
(வாட்சன் மனைவியும் மகனும்)
எனது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த நினைக்கிறேன். சில அம்சங்களில் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். கேப்டன் தோனியும் பயிற்சியாளர் பிளம்மிங்கும் அணியை எப்படி அமைக்க வேண்டும் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்’ என்றார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!