Published : 20,Apr 2018 01:54 PM

பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்?: ப.சிதம்பரம் விமர்சனம்

P-Chidambaram-slams-Modi-govt-on-rising-petrol--diesel-prices

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து ட்விட் போட்டுள்ளார்.

வரலாறு காணாத அளவு பெட்ரோல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் பல்வேறு தரப்பினர் மத்திய அரசுக்கு எதிராக தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த விலை ஏற்றம் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், “கச்சா எண்ணெய் விலை 2014-ல் $ 104. இன்று $ 74. ஏன் 2014-ல் இருந்த விலைகளை விட இன்று பெட்ரோல், டீசல் விலைகள் அதிகமாக உள்ளன? இதற்கு மத்திய அரசின் கசக்கிப் பிழியும் கலால் வரிதான் காரணம் என்று பள்ளி மாணவருக்குக் கூடத் தெரியும். குறைந்த விலையில் கச்சா எண்ணெய் என்ற ஆதாயத்தை நம்பியே மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளை ஓட்டிவிட்டது. 22 மாநிலங்களை ஆளுகிறோம் என்று பீற்றிக் கொள்பவர்கள் பெட்ரோலியம் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வர ஏன் மறுக்கிறார்கள்? கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தால் மத்திய அரசு என்ன செய்யும்? மேலும் மக்களைக் கசக்கிப் பிழியும். இந்த அரசுக்கு வேறு வழி தெரியாது.” என்று மிக காட்டமாக தெரிவித்திருக்கிறார். 

சென்னையில் டீசல் ஒரு லிட்டர் ரூ.68.90 காசுகளுக்கும், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.85 காசுகளுக்கும் இன்று விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்