[X] Close

40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!

after-40-years---YouTube--help-joining-one-family

மணிப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற கோமதிராம் கம்பீர் சிங் என்பவர் தற்போது யூடியூப் உதவியால் மீண்டும் ஒன்று சேர்ந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

இம்பாலின் கும்பாங் கிராமத்தில் வசித்து வந்த கம்பீர் சிங், கடந்த 1978 ஆம் ஆண்டு சில காரணங்களுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார். அப்போது 26 வயதாக இருந்த கம்பீர் சிங்கை, பல இடங்களில் தேடியும் குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரை தேடும் முயற்சியை கைவிட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஃபெரோஸ் ஷாகிர் என்பவர், மும்பையின் பிரதான வீதிகளில் பழைய பாடல்களை பாடியபடி அலைந்த கம்பீர் சிங்கை படம்பிடித்து யூடியூப்பில் காணொலியாக வெளியிட்டார்.

அதில் தான் மணிப்பூரை சேர்ந்தவன் என்றும், குடும்பத்தினர் குறித்தும் கம்பீர் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தக் காணொலியை பார்த்த கம்பீர் சிங்கின் உறவினர் ஒருவர் இது குறித்து மும்பை காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் மும்பையில் இருந்த கம்பீர் சிங், விமானம் மூலம் இம்பாலுக்கு அழைத்து வரப்பட்டார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் அவரை கண்ட உறவினர்கள் கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றது காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close