[X] Close

நிர்மலா தேவி விவகாரத்தால் சிபிசிஐடி தலைவர் மாற்றமா? கிளம்பியது சர்ச்சை!

Professor-Nirmala-Devi-Case-issue---CBCIT-leader-changing-

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகள் நான்கு பேரை தவறான பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் பேராசிரியை நிர்மலா தேவி பேசியது தொடர்பான உரையாடல் வெளியாகி, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து, ஆளுநர் உத்தரவிட்டார். இதற்கிடையே தமிழகத்தில் டிஜிபி ராஜேந்திரன், நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். 


Advertisement

வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த துறையின் தலைவரும், கூடுதல் தலைமை இயக்குநருமான ஜெயந்த் முரளி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் நிர்மலா தேவி விவகாரத்தில் மேலும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தற்போது சிபிசிஐடியின் புதிய கூடுதல் தலைமை இயக்குநராக அம்ரேஷ் புஜாரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா காலத்தில் அம்ரேஷ் உளவுத்துறை தலைவராக இருந்தபோது, திடீரென துறை மாற்றப்பட்டார். அவர் மீது எழும்பிய புகார்களே அதற்கு காரணம் என கூறப்பட்டது. 


 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close