[X] Close

கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்

Women-savings-in-home-and-bank-deposits---some-tips-to-save-money

பெண்களை செல்வத்திற்கு ஈடாகப் போற்றுவது நம் மண்ணின் மரபு. பல சமயங்களில் பணம் இல்லை என்று குடும்பத் தலைவர்கள் கைவிரித்த நிலையில் கடுகு டப்பாக்களிலும் புளி டப்பாகளிலும் புதைத்திருந்த பணம் சமயத்தில் கைகொடுக்கும். பணத்தை மிச்சப்படுத்தி பதுக்கிவைப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே. ஏறக்குறைய இந்த 30 ஆண்டுகளில் பெண்களின் வளர்ச்சியும் ஆண்களுக்கு சமமான வேலை வாய்ப்பிலும் வருமானத்திலும் அடைந்திருக்கும் மாற்றத்தை கண் எதிரில் பார்க்கிறோம் நாம்.

ஆனாலும் ஒரு வீட்டின் பொருளாதாரம் பணம் சார்ந்த அது பெண்களின் வருவாயாக இருப்பினும் முடிவுகள் பெரும்பாலும் ஆண்களாலேயே எடுக்கப்படுகின்றன. ஒரு புள்ளி விவரத்தின்படி ஏறத்தாழ 40 சதவித வீட்டுக் கடன்களில் பெண்களே இணை விண்ணப்பதாரராக இருந்துள்ளனர். இதன் மூலம் 40 சதவித  பெண்கள் ஆண்களுக்கு நிகரான வருமானம் பெறுபவர்களாக இருக்கின்றனர். இதுவே பங்குச் சந்தையிலும் மற்ற  முதலீட்டிலும் ஈடுபட்டிருக்கும் பெண்களின் சதவிகிதம் மிகக் குறைவே. நன்றாக சம்பாதிக்கும் பல பெண்கள் தங்களுக்கான சேமிப்பிலும் முதலீட்டிலும் செலுத்துவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் இன்றைய செலவுகளை கட்டுப்படுத்தி சேமித்து வைத்தால் அவசரத் தேவைகளுக்கும் எதிர் காலத் தேவைகளுக்கும் பயப்படத் தேவை இல்லை. ஒரு பெண்ணாக இனி முடிவு எடுங்கள் உங்களது சம்பாத்தியத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள், நீங்கள் எடுக்கும் இந்த முடிவு உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினருக்கும் நலம் தரும். 


Advertisement

பெண்களுக்கு சில எளிமையான சேமிப்பு திட்டங்கள் இதோ , உண்டியல் சிறு துளி பெருவெள்ளம் என்பதற்கு ஏற்ப நீங்கள் உண்டியலில் சேமிக்கும் சிறிய தொகையானது பெரிய தொகையாகி உங்களுக்கு சமயத்தில் கைகொடுக்கும், பிரதிவார, மாத நாட்கள், சிறப்பான நாட்கள், பணம் புழங்கும் நாட்களில் சிறியது பெரியதுமாய் நீங்கள் சேமிக்கும் பணம் பலமடங்காகி  கைகொடுக்கும். வீட்டிலிருக்கும் சிறுபிள்ளைகளுக்கும் இப்பழக்கத்தை கற்றுத்தர மறக்காதீர்கள். வங்கி அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் ஒவ்வொரு மகளிரும் தனக்கேற்ப தனி சேமிப்பு கணக்கு துவங்குவது அவசியம். உங்களுக்கென்று ஒரு இலக்கினை வகுத்துக்கொண்டு அந்த அளவு பணத்தை மாதமாதம் இந்தக் கணக்கில் சேமித்து வாருங்கள். இன்னும் பல வங்கிகளில் மகளிருக்கு என்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளன. அதை அறிந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய பணப் புழக்கத்தில் அல்லது வருமானத்தில் 10 சதிவிதம் சேமிப்புக்கு என ஒதுக்குங்கள்.

பங்குச்சந்தை முதலீடுகள்

பங்குச்சந்தை முதலீடுகள் என்றதும் கோட்-சூட் போட்டவர்கள் மட்டும்தான் ஈடுபடுவார்கள் என்றில்லை. அதன் சூட்சமம் தெரிந்த எவர் வேண்டுமானாலும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடலாம். சில ஆயிரம் ரூபாயுடன் உங்கள் மேற்பார்வையில்  இருக்கும் இந்த  சேமிப்பில் நல்ல லாபம் பெறலாம்.

தொடர்ச்சியான வைப்புநிதி (Recurring deposit)

மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைப்பது தான் தொடர்ச்சியான வைப்புநிதி. குறைந்தபட்சம் 6  மாதம் முதல் 10 வருடம் வரை இந்த சேமிப்பை தொடரலாம். நீங்கள் சேமிக்கும் இந்தப்பணத்திற்கு 4 .5 சதவிதம் முதல் 7 .9 சதவிதம் வரை வட்டி வழங்கப்படும். சேமிப்பும் முதலீடும் சேமிப்பு என்பது பணத்தை சேகரித்து ,பாதுகாத்து வைப்பது, அதுவே முதலீடு என்பது அடிப்படைத் தொகையிலிருந்து அதிக வருமானம் பெறும் நோக்கில் செய்வது. ஒருவருடைய அன்றாடச் செலவுகள் போக ஒரு தொகையை சேமிக்கவும் வேண்டும். வருங்காலத் திட்டத்திற்கு முதலீடும் செய்ய வேண்டும். அளவறிந்து செலவு செய்து ஆடம்பரத்தை விடுத்து செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க தொடங்குங்கள். பெண்கள் சேமிப்பது மட்டுமின்றி தனக்கென பொருளாதார உரிமையிலும் முதலீட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close