நிர்மலா தேவி விவகாரத்தில் பசுந்தோல் போர்த்திய புலிகள் யார்?: விஜயகாந்த் கேள்வி

நிர்மலா தேவி விவகாரத்தில் பசுந்தோல் போர்த்திய புலிகள் யார்?: விஜயகாந்த் கேள்வி
நிர்மலா தேவி விவகாரத்தில் பசுந்தோல் போர்த்திய புலிகள் யார்?: விஜயகாந்த் கேள்வி

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தின் பின்னணியில் உள்ள பசுந்தோல் போர்த்திய புலிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதில் மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாகவும், இதன் மூலம் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசைகளையும் பேராசிரியர் பேசியிருந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பான கோப்புகளை பெற்று அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்

இந்த விவகாரத்தில் நீதிமன்றமே தானாக முன்வந்து தனது நேரடி கண்காணிப்பில் நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த விசாரணைக் குழு உண்மைகளைக் கண்டறிந்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அப்போதுதான் பெற்றோர்கள் அச்சமின்றி தனது பெண் பிள்ளைகளை பள்ளி கல்லூரிகள் மற்றும் பணிக்கு தைரியமாக அனுப்பும் சூழ்நிலை உருவாகும் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் பேராசிரியை விவகாரத்தில் ஆளுநரே சந்தேக வளையத்தில் இருப்பதால், சிபிஐ கூட இதை நேர்மையாக விசாரிக்குமா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த விவகாரத்தில் ஆளுநர் தாமாக முன்வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து நிர்மலா தேவியை பார்த்ததில்லை எனக் கூறியிருப்பதும் தமக்கு 78 வயதாகிறது, கொள்ளுப்பேரன்கள் இருக்கிறார்கள் என தன்னிலை விளக்கம் கூறியிருப்பது எண்ணற்ற கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார் எனவே, நிர்மலா தேவியின் பின்னணியில் உள்ள பசுந்தோல் போர்த்திய புலிகள் போன்ற சக்தி வாய்ந்த அதிகாரமிக்க நபர்கள் யார் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com