[X] Close

மன வருத்தத்தால் தாய், மகன் தற்கொலை - காவல் துறையினர் விசாரணை

Mother-s-son-suicides--police-are-investigating

கோவையை அடுத்த கணபதி பகுதியில் உள்ள மீனாட்சி நகர் பகுதியில் ஐ டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ஹரிஷ்நாத். இவரும் அவரது தாய் பிரசன்னா ஆகிய இருவர் மட்டுமெ வசித்து வந்து உள்ளனர். இவர்களின் மகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நோய்வாய்பட்டு உயிரிழந்தார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் அவரது தந்தையும் இதய நோயால் உயிரிழந்தார். இந்நிலையில் இருவரும் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஹரிஷ்நாத் மற்றும் தாய் பிரசன்னா இருவரையும் அக்கப் பக்கத்தினர் கடந்த சனிக்கிழமை கடைசியாக பார்த்ததாக கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து இன்று திடீரென அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி உள்ளது . ஹரிஷ்நாத்தின் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசுவது தெரிய வந்தததையடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்து உள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் வந்து பார்த்தபோது ஹரிஷ்நாத் மற்றும் அவரது தாய் இருவரும் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களது உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தந்தை இறந்ததால் இருவரும் மன வருத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே தற்கொலை செய்து இருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். இது குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags : தற்கொலைsuicide
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close