
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், அக்கட்சி மேலிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்துகின்றனர். திமுக தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், கடைசியாக நடந்த இரண்டு தேர்தல்களில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துசோழன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் விரும்ப மனு அளித்துள்ளார். நேர்காணலைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியின் திமுக வேட்பாளர் இன்றே அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.