[X] Close

வரதட்சணைக் கொடுமையால் கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவன்

Dowry-Issue--Pregnant-Women-killed-by-Husband

தஞ்சையில் வரதட்சணைக் கேட்டு கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

தஞ்சை மானம்புசாவடி மேட்டு எல்லையம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2 வது முறையாக காயத்ரி கர்ப்பமாக இருந்தார்.திருமணத்தின் போது  காயத்ரி வீட்டில் இருந்து சீர் வரிசையாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதாகக் கூறியிருந்தனர். திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆன பிறகும் அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சுந்தரத்துக்கும் காயத்திரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

மேலும் புதிதாக வீடுகட்டுவதற்கு உங்கள் வீட்டில் இருந்து பணம் வாங்கி வா என்று சுந்தரம் மனைவியிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுந்தரம் மனைவி காயத்ரியின் தலையை பிடித்து சுவரில் தள்ளினார். இதில் சுவரில் மோதி அவர் பலத்தக் காயம் அடைந்தார்.உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காயத்ரியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


Advertisement

இந்தச் சம்பவம் குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுந்தரத்தை கைது செய்தனர். மேலும் காயத்ரி உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

( தகவல்கள்: காதர் ஹூசைன் - செய்தியாளர் )


Advertisement

Advertisement
[X] Close