Published : 17,Apr 2018 11:24 AM

கன்னட கலைஞர்கள் தமிழில் நடிக்கக் கூடாது என்றால் ஏற்பார்களா? - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

Minister-Pon-Radhakrishnan-answered-to-bharathiraja-comment-on-Rajini

கன்னட கலைஞர்கள் தமிழிலும், தமிழ் கலைஞர்கள் கன்னடத்திலும் நடிக்கக் கூடாது என கூறினால் திரையுலகினர் ஏற்பார்களா என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 

ரஜினியை கொண்டாடிய தமிழ் மக்களுக்கு திடீரென இப்போதுதான் நிறம் தெரிகிறதா எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். ரஜினி குறித்து இயக்குநர் பாரதிராஜா விமர்சித்துள்ள நிலையில், அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, இயக்குநர் பாரதிராஜா, சீமான் போன்றோர் அந்நிய சக்திகளின் தூதுவர்களாக செயல்படுகின்றனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். ரஜினிகாந்த் கர்நாடக காவியின் தூதுவர் என்று பாரதிராஜா விமர்சித்திருந்த நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்