கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது காவல்நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் புகார் அளித்திருந்தது. அத்துடன் அவரை கைது செய்யக்கோரி மாணவர்களும், பெற்றோர்களும், மகளிர் அமைப்பினரும் கல்லூரி முன் கூடி முழக்கமிட்டனர்.
இதையடுத்து நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து இன்று மாலை அவர் காவல் துறையால் கைது செய்யபட்டார். கைது செய்யப்பட்ட அவர் மீது உயர்மட்ட விசாரணை நடத்தக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணையை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் நடத்துவார் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார். குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பேராசிரியரின் தவறான நடவடிக்கை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின் ‘ அவர் எந்த 'மேலிடத்திற்காக' இந்த ஈனச் செயலில் ஈடுபட்டார் என்பதைக் கண்டறிந்து குற்றவாளிகளை கூண்டிலேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்த பிரச்னையில் வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற மேற்பார்வையில், சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'