Published : 16,Apr 2018 04:27 PM

தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும் - வானிலை மையம் உறுதி

Southwest-monsoon-will-help---Weather-Center-confirmed

இந்த வருடம் பருவமழை சராசரி அளவில் இருந்து குறைய வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை மே 15ல் கேரளாவில் தொடங்கும் என்றும், வழக்கத்தை விட முன்னதாகவே பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி மைய கணிப்புப்படி, சராசரி 97 சதவிதமாக பெய்து வரும் பருவமழை, குறைய வாய்ப்பு இல்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை மூலமே இந்தியாவுக்கு பெருமளவில் மழைப்பொழிவு கிடைத்து வரும் நிலையில், இவ்வருடம் மழையின் அளவு குறையாது என தனியார் ஆராய்ச்சி மையங்களும் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வருடம் விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு தண்ணீர் பற்றக்குறை ஏற்படும் நிலை இருக்காது என்றும் கருதப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்