[X] Close

பாலியல் வன்கொடுமையால் 11-வது படிக்கும் மாணவி கர்ப்பம்: இளைஞர் கைது

Minor-girl-raped-and-pregnant--youth-arrested-in-Salem

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்சோ ச‌ட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி கீழ்வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (23). இவருக்கும் அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியின் மகளான 11-ம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் செயல்களில் மாற்றம் வந்ததை அடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து நடந்த விசாரணையில் விஜயகுமார் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனிடையே விஜயகுமாருக்கும் வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close