Published : 12,Mar 2017 02:09 PM

பஞ்சாப் முதலமைச்சராக வரும் 16ல் பதவியேற்கிறார் அமரிந்தர் சிங்

AmarinderSingh-to-take-oath-as-Punjab-Chief-Minister-on-March-16

பஞ்சாப் மாநில முதல்வராக கேப்டன் அமரிந்தர் சிங் மார்ச் 16ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேப்டன் அமரிந்தர் சிங், பஞ்சாப் ஆளுநர் வி.பி சிங் பட்நோரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமரிந்தர் சிங், வரும் 16ஆம் தேதி தனது தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்கும் என்று தெரிவித்தார். வரும் 14ஆம் தேதி டெ‌ல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் யார் என்பது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்