[X] Close

குடிக்க பணம் கொடுக்க மறுத்த தந்தை: இரும்பு ராடால் அடித்து கொன்ற மகன்..!

Son-killed-his-father

குடிக்கப் பணம் தர மறுத்த தந்தையை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். ஓய்வுப்பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவரது மகன் ராஜ்குமார். திருமணமானவர். பெரிய அளவில் எந்த வேலையும் செய்யாமல் அடுத்தவர் தயவிலே வாழ்ந்து வந்துள்ளார். ராஜ்குமாருக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி குடிப்பதற்கு தந்தை மனோகரன் கையை எதிர்பார்த்திருக்கிறார். இதுமட்டுமில்லாமல் வீட்டினை தன் பெயருக்கு மாற்றி எழுதி வைக்குமாறும் அடிக்கடி வற்புறுத்தி வந்திருக்கிறார். கடந்த 2 வருடங்களாகவே தந்தை மகனுக்கு இடையே இந்தப் பிரச்னை இருந்து வந்த நிலையில், வீட்டை மகன் பெயரில் எழுதி வைக்காமல் அதனை தள்ளி போட்டு வந்திருக்கிறார் மனோகரன். இதனிடையே சம்பவத்தன்று குடிப்பதற்காக வழக்கம்போல தந்தையிடம் ராஜ்குமார் பணம் கேட்டிருக்கிறார். ஆனால் பணம் கொடுக்க மனோகரன் மறுத்திருக்கிறார்.


Advertisement

இதனால் அப்பா- மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் தந்தை என்றும் பாராமல் பலமாக தாக்கியிருக்கிறார் ராஜ்குமார். அப்போது மனோகரன் கீழே விழுந்திருக்கிறார். மீண்டும் ஆத்திரம் தீராமல் அருகில் கிடந்த இரும்பு ராடால் தந்தையின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்து வரும் போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.

தகவல்கள்: சுரேஷ்குமார், செய்தியாளர்.


Advertisement

Advertisement
[X] Close