Published : 15,Apr 2018 04:47 AM

அழகு நிலையத்தில் புகுந்த கொள்ளையர்கள்: மடக்கி பிடித்த காவல்துறை

Police-Arrested-Robbers-in-SPA

சென்னையிலுள்ள அழகு நிலையத்தில் புகுந்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள தனியார் அழகு நிலையத்தில் நேற்றிரவு 3 கொள்ளையர்கள் புகுந்தனர். அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அந்த கடை உரிமையாளர் சுனில்குமார் கேமரா மூலம் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.இதனையடுத்து அசோக் நகர் காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொள்ளையில் ஈடுபட்ட மூவரை மடக்கி பிடித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். கொள்ளையர்கள் மூவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்ததில் பல்லாவரத்தை சேர்ந்த சுதா ராஜன், வடபழனியைச்  சேர்ந்த சம்சு இம்மத்,கோடம்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 2அரிவாள், 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.இவர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்