மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு: ஆசிஃபா கொலைக்குறித்து வரலட்சுமி

மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு: ஆசிஃபா கொலைக்குறித்து வரலட்சுமி
மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு: ஆசிஃபா கொலைக்குறித்து வரலட்சுமி

நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் இல்லை என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் இல்லை என்றும் அரசியல்வாதிகள், கற்பழிப்பு குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னமாவது போதாதா..? என்று கேட்டுள்ளார். மேலும் எதிர்த்து கேள்வி கேளுங்கள், நியாயமான நல்ல விஷயங்களுக்காக எதிர்த்து நில்லுங்கள் என்றும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் ஆனால் தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள். ஜல்லிக்கட்டு, காவிரி போன்ற விவகாரங்களில் ஒரு கண் சிமிட்டலை கூட டிரெண்டிங் ஆக்க முடிந்த நம்மால் இதையும் செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு உயிரின் மதிப்பு என்பது ஒரு நாள் கோபத்திற்கும், இரங்கலுக்கும் மட்டுமே உரியதா..? எனக் கேள்வி எழுப்பி உள்ள அவர், நாம் அனைவரும் இணைவோம், நியாயம் கேட்போம் என்றும் கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று ஒரு சட்டம் இயற்ற போராடுவோம் என்றும் கூறியுள்ளார். மேலும் நாம் அனைவரும் இது நம் பிரச்னை இல்லை என்று நினைக்க வேண்டாம் என்றும் இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என எச்சரித்துள்ளார். மேலும் இந்த வலியையும், ஆத்திரத்தையும் புரிந்து கொள்ள நான் ஒரு தாயாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மனித தன்மையுடையவராக இருந்தாலே போதுமானது என்று பதிவிட்டுள்ளார். கடுமையான தண்டனை பற்றிய பயம் இல்லையென்றால் இது போன்ற கொடூரங்களை ஒரு நாளும் நிறுத்த முடியாது. காலம் கடக்கும் முன்பே ஒரு மாற்றத்தை ஒன்றிணைந்து நாம் அனைவரும் ஏற்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com