நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல; போலீசாரை தாக்குவதற்குத்தான் நாங்கள் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா? என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் மற்றும் ரசிகர்கள் சிலர் தக்கப்பட்ட சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து ரஜினி செய்த ட்வீட்டுக்கும் கடும் எதிர்வினை எழுந்தன.
இந்நிலையில், இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் நாம் தமிழர்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், “காவிரி விவகாரத்தில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என்று போராடினோம். ஐபிஎல் போட்டியின்போது, ரசிகர்கள் மற்றும் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறானது. யார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பதை காவல்துறைதான் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த அமைப்பு, எந்த கட்சி என்று தெரியாமல் நாம் தமிழர் கட்சி மீது குற்றம் சுமத்துவது தவறானது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடும் எங்கள் கட்சித் தொண்டர்களை கைது செய்ய வேண்டாம்; என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள். போலீஸ் கைதுக்கு எல்லாம் பயந்து ஓட மாட்டோம். போலீசார் தாக்கப்படுவதை தடுத்த என் மீது கொலை முயற்சி பதிந்துள்ளார்கள். குறிப்பாக நாம் தமிழர் கட்சி மீதும், என் மீதும் 10 பிரவு கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது போலீசை தாக்கியது யார் என்றே தெரியவில்லை. காவல்துறைக்கு எதிரான கட்சி போல, நாம் தமிழர் கட்சி மீது குற்றம்சாட்டுவது தவறு.
போலீஸ் சொல்வதை கேட்டுதான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். என் மேல் கொலை முயற்சி வழக்கு ஏன் போட்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. போராட்டத்தில் திடீர் தாக்குதல் ஏற்பட்ட போது, நான் தாக்கியதாக திட்டமிட்டு கொலை முயற்சி செய்கிறோம் என்ற பொய் வழக்கு போடப்பட்டது” என்றார்.
Loading More post
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!