[X] Close

அமைச்சர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்கள் 

Women-who-tried-to-commit-suicide

மதுரை‌ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் முன்பாக, 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை உண்டாகியுள்ளது

மதுரை மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த கவத்து திருப்பதி, மணி, பிரேம், பாண்டி, குண்டுமணி ஆகியோர் மீது வெவ்வேறு காவல்நிலையங்களில் 14 வழக்குகள் உள்ளன. தப்பிச் சென்ற இவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். கேரளாவில் பதுங்கி இருப்பதாக  கிடைத்த தகவல் அடிபடையில் பதுங்கியிருந்த 5 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இவர்களில் 2 பேருக்கு கைகால்கள் உடைந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும், மீதமுள்ள 3 பேரை என்கவுண்ட்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறி 5 பேரின் உறவினர்களான 5 பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் பங்கேற்று திரும்பிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் ஆட்சியர் வீர ராகவ ராவ் முன்பாக தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close