
சத்தீஸ்கரை சேர்ந்த பழங்குடியின வயதான பெண் ஒருவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஜோடி காலணிகளை பரிசாக வழங்கினார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூரை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவருக்கு ஜோடி காலணிகளை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். காலணிகளை வழங்கும்போது, அப்பெண் முன் குனிந்து நின்ற பிரதமர் மோடி, அணிவதற்கு ஏதுவாக காலணிகளை வழங்கினார். சரண்-படுகா (Charan-Paduka) திட்டத்தின் கீழ் இந்த காலணிகளை பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார். சரண்-படுகா திட்டமானது, காடுகளில் கடுமையான இடங்களில் கால்கடுக்க நின்று இலைகள் பறிக்கும் தொழிலாளர்களின் நலன் கருதி வழங்கப்படுகிறது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இடமான பிஜாபூர் சென்ற முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “ அம்பேத்கர் மூலம் நான் உத்வேகத்தை கற்றுக்கொண்டேன். அந்த உத்வேகத்தில் தான் இங்கு வந்துள்ளேன். மத்திய அரசாங்கம் உங்களுடையது என்ற நம்பிக்கையை உங்களுக்கு அளிக்கவும் இங்கு வந்துள்ளேன். அது உங்கள் விருப்பத்தையும் ஆதரிக்கும்” என்றார். இதுதவிர இன்னும் சில மக்கள் நல திட்டங்களையும் பிரதமர் மோடி பிஜாபூரில் தொடங்கி வைத்தார்.