கோவையில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மனுக்கு ஐந்து கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் கோவையை அருகே காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனை அலங்கரித்து தனலட்சுமி அலங்கார பூஜை செய்யப்படுவது வழக்கம்.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்த ஐந்து கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை பெற்றுகொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் செய்யப்பட அலங்காரத்தை பொதுமக்கள் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஆண்டுக்காண்டு அலங்காரம் செய்யப்படும் ரூபாய் நோட்டுக்களின் மதிப்பும் அதிகரித்திக் கொண்டே வருகிறது. தனலட்சுமி பூஜை வழிபாடுகள் முடிவடைந்த பிறகு அந்தந்தப் பகுதி பொது மக்களுக்கு அந்த நோட்டுக்கள் திருப்பி அளிக்கப்படும். சென்ற ஆண்டு ரூபாய் மூன்று கோடி மதிப்புள்ள நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்காக கோவை காவல் துறையினர் இப்பிரசித்திபெற்ற கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தகவல்கள் : சுஜாதா, செய்தியாளார் - கோவை
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்