கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட வங்கி உதவி மேலாளர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டா ர். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டனக் குரல்கள் பலமடைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டும் என பலர் கோரிக்கை வைத் து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் கோடக் மகேந்திரா வங்கியின் உதவி மேலாளராக இருந்த விஷ்ணு நந்தகுமா ர், முகப்புத்தகத்தில் பரபரப்புப் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ இந்த வயதிலேயே ஆசிஃபா கொல்லப்பட்டது நல் லது. இல்லை என்றால் அவள் வளர்ந்து இந்தியாவுக்கு எதிராக குண்டு வீசுபவளாக மாறியிருப்பாள்’ என்று கூறியிருந் தார். இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. இவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந் தன.
‘விஷணுவை வெறுக்கிறோம். உங்கள் வங்கியில் பணியாற்ற தகுதியற்றவர் அவர். நல்ல மனம் உள்ளவர்கள் வெளியே அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அவருக்கு வேலை கொடுங்கள்’ என்றும் ’குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வதை ஆதரிப்பவர்களையா வேலையில் வைத்திருக்கிறீர்கள்? இதுதான் உங்கள் நோக்கமா? இவரை
உடனடியாக வெளியேற்றுங்கள். உங்க நிறுவனப் பெயரைக் காப்பாற்றுங்கள்’ என்றும் கூறியிருந்தனர். ட்விட்டரிலும் இந்தக் குரல் எதிரொலித்தது.
இதையடுத்து கோடக் மகேந்திரா வங்கி நிறுவனம், விஷ்ணு நந்தகுமாரை வேலையில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!