[X] Close

பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ: பெண்ணை மிரட்டி பணம் பறித்த ’நண்பனை’ தேடுது போலீஸ்!

Mumbai-man-rapes-woman--films-it--extorts-Rs-6-lakh

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement

மும்பை சாந்தாகுருஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). விவாகரத்து பெற்றுள்ள இவருக்கு இரண் டு குழந்தைகள் உள்ளனர். இவர் சில வருடங்களுக்கு முன்  வேலைக்காக துபாய் சென்றார். அங்கு சுரேஷ் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுரேஷும் மும்பையை சேர்ந்தவர். இதையடுத்து தொடர்ந்து பழகி வந்தனர். இந்நிலையில் சுரேஷின் அறைக்கு ஒரு நாள் சென்ற சுமதியை, அவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதை வீடியோவும் எடுத்துள்ளார். பின்னர் மும்பை வந்துவிட்டார் சுமதி. 


Advertisement

மும்பை வந்த சுரேஷ், தன்னிடம் அந்த வீடியோ இருப்பதாகவும் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று கூறி பலமுறை பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள் ளார். பின்னர், அவரிடம் 6 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தையும் வாங்கியுள்ளார். சுரேஷின் மிரட்டல் தொடர்ந்ததால் ஒரு கட்டத்தில் முடியாமல் சாந்தாகுரூஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் சுமதி. 

‘குற்றவாளியை தேடி வருகிறோம். சுமதி சொல்லும் வீடியோ இன்னும் எங்கள் கைக்கு கிடைக்கவில்லை. கிடைத்த பின் பே அது போலியானதா, உண்மையானதா என்பது தெரிய வரும்’ என்று கூறியுள்ள போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுரே ஷை தேடி வருகின்றனர். 


Advertisement

Advertisement
[X] Close