Published : 13,Apr 2018 01:25 PM

சவப்பெட்டியில் படுத்து விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்

Set-up-Cauvery-Management-Board-immediately-for-farmers----sake--EPS-urges-Narendra-Modi

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே விவசாய சங்கத்தினர் சவப்பெட்டியில் படுத்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கங்கள் பல்வேறு கட்சிகளுடன் சேர்ந்து போராடி வருகிறது. இந்த நிலையில் விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் விவசாய சங்கங்களை சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். போராட்டத்தின் போது திடீரென விவசாயிகள் சவப்பெட்டியில் படுத்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சவப்பெட்டியில் படுப்பதை தவித்த விவசாயிகள் சவப்பெட்டியை மட்டும் வைத்துக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்