Published : 12,Apr 2018 03:32 PM

அரசியல்வாதிகளிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்: தேர்தல் ஆணையம்

Election-Commission-Seeks-Rule-making-Power-Protection-From-Political-Pressure

அரசியல் அழுத்தம் காரணமாக சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் போட்டியிடுவதை தடுக்கக் கோரி அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக புதிய சட்டம் இயற்ற தங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

தேர்தல் ஆணையத்திற்கு தனி செயலகம் அமைக்க வேண்டும் என்றும் அதன் செலவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. அதேபோல், “தலைமை தேர்தல் ஆணையரைப் போல் அதற்கு அடுத்தாற்போல் உள்ள தேர்தல் ஆணையர்களையும் உச்சநீதிமன்றத்தால் மட்டுமே நீக்க முடியும் என்பது போல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்” என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்