[X] Close

காவிரி வாரியத்தை உடனே அமையுங்கள்: பிரதமரிடம் முதல்வர் மனு

TN-CM-petition-with-PM-Modi-to-make-cauvery-management-board

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.


Advertisement

சென்னை வந்த பிரதமர் மோடியிடம் இந்தக் கோரிக்கை மனுவை முதல்வர் பழனிசாமி அளித்தார். காவிரி நீர் பங்கீட்டிற்கான திட்டத்தை 6 வாரத்திற்குள் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருந்ததையும், முதல்வர் தன் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் கடந்த 9-ம் தேதி நீதிபதிகள் தெரிவித்த விளக்கத்தின்படி உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற அம்சமும் உள்ளது தெளிவாகியுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

வரும் ஜூன் 1-ஆம் தேதி அடுத்த சாகுபடி பருவம் தொடங்கும் முன் தமிழக டெல்டா விவசாயிகள் தங்கள் பணிகளை தொடங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே, போதிய அதிகாரங்களுடன் கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து உச்சநீதிமன்ற உத்தரவை திறம்பட செயலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement

இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் பிரதமர் மோடி சென்னை வருவதால் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பினரும் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புச் சட்டை அணிந்தும், வீடு வாசலில் கருப்புக் கொடி நாட்டியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


Advertisement

Advertisement
[X] Close