பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐஐடியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்னை ஐஐடி ஹெலிபேடிற்கு வந்தார். பிறகு கார் மூலம் அடையாறு புற்றுநோய் மையத்திற்கு அவர் சென்றார்.
அப்போது பிரதமர் சென்று கொண்டிருக்கும்போது ஐஐடி வளாகத்தில் நின்றிருந்த மாணவர்கள் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரதமரின் தமிழக வருகையை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடியேந்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் கிண்டி, விமான நிலையம், சின்னமலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பிரதமர் மோடி சாலை மார்க்கமாக செல்லாமல் ஐஐடி வளாகத்தில் ஹெலிபேட் அமைத்து அடையார் புற்றுநோய் மையத்திற்கு சென்றார். ஆனால், ஐஐடி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?