
உச்சநீதிமன்றத்தில் வழக்கை திரும்ப பெறுங்கள். இல்லையேல், கருப்பு என்கிற நெருப்பு அணையாது என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து இன்று, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்கள் இல்லங்களின் கருப்புக் கொடியேற்றியும், கருப்புடையணிந்தும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இனியாவது, விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்! விமானத்தில் மேலே மட்டும் பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய் கருப்புக் கொடி அசைவதை பாருங்கள், உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கை திரும்ப பெறுங்கள். இல்லையேல், கருப்பு என்கிற நெருப்பு அணையாது” என பதிவிட்டுள்ளார்.