
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில் எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையின் செயலாளரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபா, தான் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதே போல் ஓபிஎஸ் அணியும் சசிகலா அணியும் இத்தொகுதியில் போட்டியிட உள்ளன. திமுக சார்பில், விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே பலமுனை போட்டி நிலவுவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகரில் தேமுதிக சார்பில் வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் போட்டியிடுவார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.