Published : 11,Apr 2018 10:25 AM

அல்ஜீரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற விமானம் விபத்து - 100 பேர் பலி

Military-plane-crashes-in-Algeria--killing-more-than-100-people

அல்ஜீரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 100 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் அல்ஜீர்ஸ் நகரில் உள்ள பௌபரிக் விமான தளத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டது. விவசாய நிலத்தில் இருந்து புறப்பட சில நிமிடங்களிலே விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை.

விமான விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளததாக அந்நாட்டு அரசு வானொலி செய்தியும் வெளியிட்டது. 2003ம் ஆண்டிற்கு பிறகு அல்ஜீரியாவில் நடைபெற்ற மோசமான விபத்து இதுதான். 2003ம் ஆண்டு டமன்ரசெட் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் 102 வீரர்கள் உயிரிழந்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்