[X] Close

2017-2018 பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்

Box-office-hits-on-2017-2018

2017-18 ஆண்டில் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் பட்டியலில் எந்தெந்த படங்கள் இடம் பெற்றுள்ளன என்ற விவரம் வெளியாகி உள்ளது.

சினிமாவின் வெற்றி என்பது அதன் வசூலை மையமாக வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் பாக்ஸ் ஆஃபீஸ் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என பலரும் போட்டி போடுகின்றனர். ஆனால் மக்கள் எல்லோருக்கும் வசூலை வாரிக் கொடுத்துவிடுவதில்லை. அதன்படி பாலிவுட் சினிமாவில் 2017-18 ஆண்டில் வெளியான படங்களில் எந்தெந்த படங்கள் வசூலை வாரிக் குவித்துள்ளன? அதன் விவரங்கள் என்ன என்பது குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன.

அந்தப் பட்டியலில் அதிக வசூலை அள்ளிய முதல் படமாக ‘பத்மாவத்’ இடம் பிடித்துள்ளது. அந்தத் திரைப்படம் 280 கோடி ரூபார் வசூல் செய்துள்ளது. அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள திரைப்படம் ‘பாகுபலி 2’. அது 131 கோடி வசூலை அள்ளி உள்ளது. ‘ரைட்’ படத்திற்கு மூன்றாவது இடம். அது 95 கோடி வசூல் செய்துள்ளது. ஹிச்கி 41 கோடியையும், பாரி 25 கோடியையும் ஹேட் ஸ்டோரி-4 18 கோடியையும், ப்ளாக்மெயில் 10 கோடியையும் ஈட்டி உள்ளன. இந்த ஆண்டில் நான்கு மாதங்களை தான் நாம் இதுவரை கடந்துள்ளோம். இன்னும் பல பாதங்கள் மிச்சம் உள்ளன. அதன்படி சினிமா உலகம் இன்னும் சில பாய்ச்சல்களை எட்டலாம்.  


Advertisement

Advertisement

Advertisement
[X] Close