[X] Close

சேப்பாக்கத்தில் செல்போனுக்கு அனுமதி: திடீர் மாற்றம்

Celphone-permited-For-Fans-Ahead-of-Chepauk-Game

சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக்  காண வரும் ரசிகர்கள் செல்போன் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Advertisement


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தினமும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போட்டியை மீறி நடத்தினால் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று சிலர் அறிவித்தனர். ஆனால் போட்டியை நடத்தியே தீருவோம் என்றும் அரசியலுக்குள் விளையாட்டை இழுக்க வேண்டாம் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.இந்தநிலையில் சென்னை- கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடை பெறுகிறது. போட்டியைக் காணவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.பேக், சூட்கேஸ்கள்,செல்போன்கள், மடிக்கணினி, ரிமோட்டில் இயங்கும் கார் சாவி உள்ளிட்ட எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது. வீடியோ கேமரா, பைனாகுலர், ஆடியோ பதிவு செய்யும் கருவி, இசை சம்பந்தமான கருவி, சிகரெட், தீப்பெட்டி, வெடிபொருட்கள், பட்டாசுகள், கண்ணாடி பொருட்கள், கத்தி, கத்தரிக்கோல், தெர்மாகோல் அட்டை, தண்ணீர் பாட்டில், கறுப்பு நிற கைக்குட்டை, கறுப்புக் கொடி, கறுப்பு துணிகள், குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மைதானத்தின் சோதனை பகுதியில் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை வைக்க அறைகள் ஏதுமில்லை என்பதால் அதை கொண்டுவராமல் இருப்பதே நல்லது என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளப்பியது. எப்படி செல்போன் கூட இல்லாமல் 3மணி நேரம் இருக்க முடியும் என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பொங்கினர். இதனையடுத்து தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள் செல்போன்களை மட்டும் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close