[X] Close

காயத்தால் அணியிலிருந்து வெளியேறிய கேதர் ஜாதவ்

Hamstring-injury-rules-Jadhav-out-of-IPL-2018

காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து கேதர் ஜாதவ் வெளியேறியுள்ளார்.


Advertisement

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, கேதர் ஜாதவ் காயமடைந்து வெளியேறினார். சென்னை அணி வெற்றி பெறுமா? என்ற சந்தேகத்தில் திண்டாடிய போது, காயத்துடன் வந்த கேதர் ஜாதவ் கடைசி ஓவரில், சிக்சரும் பவுண்டரியும் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 

இதுபற்றி கேதர் ஜாதவ் கூறும்போது, சிஎஸ்கே வெற்றியின் மூலம் மனரீதியாக மகிழ்ச்சியாக இருந்தாலும், உடல்ரீதியாக காயமடைந்திருக்கிறேன். அடுத்த சில வாரங்கள் என்னால் விளையாட முடியாது. இந்தப் போட்டியில் என்னால் ஓட முடியாது என்பதால், சிக்சரும் பவுண்டரியும் விளாச நினைத்தேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ள போட்டியில் இருந்து கேதர் ஜாதவ் வெளியேறியுள்ளார். மேலும் இனி வரும் போராட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close