மாபெரும் தலைவராக இருப்பவர்கள் அப்பா வேடத்தில் நடிக்கும் என்னை பார்த்து பயப்பட வேண்டாம் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சத்யராஜ் “ நான் ஒரு சாதாரண நடிகன். அப்பா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.அவ்வளவு பயமா என்னை பார்த்து? நான் என்ன பெரிய ஆளா? எனக்கே டவுட்டாக இருக்கிறது” என நையாண்டியாக பேசினார். “வேடத்தை பார்த்தே பயப்படுகிறார்களா?. நான் 40 வருடமாக திரைத்துறையில் நடித்து வருகிறேன். வருமான வரித்துறை சோதனை வரவேண்டும் என்றால் எப்போதே வந்திருக்க வேண்டும். இதுவரை வந்ததில்லை. உண்மையிலே ஏதாவது தவறு நடந்திருந்தால் கூட நடிக்க வந்த ஆரம்பக் காலகட்டத்தில் வந்திருக்கும். ஆனால் அப்போது நடக்கவில்லை. இப்போது எவ்வளவு உஷாராக இருப்போம். உஷார் என்றால் நேர்மையாக இருக்கிறோம் அவ்வளவு தான். மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. என்னைப்பார்த்து யாரும் பயப்படவேண்டாம். அரசியல் சம்பந்தமாக எந்தக்கனவு எனக்கு கிடையாது.தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை என்பதால் குரல் கொடுக்கிறேன். அரசியல் குறித்த எந்த எதிர்கால திட்டமும் எனக்கு கிடையாது” என்றார்.
மேலும் எல்லா அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கி போராட வேண்டும். ஒரு நடிகனால் அந்தளவு இறங்கி போராட முடியாது.அவனது மனநிலை குறித்து எனக்கு தெரியும்.என் தகுதி எனக்கு தெரியும். களப்போராளிகளின் பின்னால் நிற்கவே நான் ஆசைப்படுகிறேன். அந்தக்கடமையை செய்தாலே போதும் என நினைக்கிறேன். மாபெரும் தலைவராக இருப்பவர்கள் அப்பா வேடத்தில் நடிக்கும் சத்யராஜை பார்த்து பயப்பட வேண்டாம்.நான் விளையாட்டிற்கு ஆதரவானவன். ஆனால் தற்போது இங்கிருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டி தேவையில்லை. இளைஞர்களுக்கு சமூகத்தின் மீது பார்வை வந்துள்ளது. இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்றால் இளைஞர்களின் கவனம் திசைத் திரும்பும் எனக் கூறினார்.
Loading More post
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!