சுரேஷ் ரெய்னா கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமையாததை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என பல அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினி உள்ளிட்ட சிலர், சென்னை வீரர்கள் கறுப்புப்பட்டை அணிந்து தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர். சேப்பாக்கம் விளையாட்டு மைதானமே காலியாக இருந்தால் நமது ஒற்றுமையை உலகம் அறியும் என பாரதிராஜா, சத்யராஜ் உட்பட பல திரைத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடக்கன்குளம் ராஜாஸ் கல்லூரியில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவதாக இருந்தது. தமிழ்நாட்டில் வலுத்து வரும் போராட்டத்தை உணர்ந்து கொண்ட கல்லூரி நிர்வாகம் அந்நிகழ்ச்சியை ரத்து செய்து விடுவதாக அறிவித்துள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறலாம் என முன் கூட்டியே உணர்ந்து இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதை காவிரி போராட்ட ஆதரவாளர்கள் தங்களின் முதல் கட்ட வெற்றியாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!