Published : 09,Apr 2018 05:17 AM
ஐபிஎல் போட்டியை நிறுத்த சொல்வது முட்டாள்தனம்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தக்கோருவது முட்டாள்தனமானது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர் “பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டுவது, திமுக தங்களுக்கு தாங்களே கறுப்புக் கொடி காட்டுவது போலாகும்.கர்நாடகாவில் சித்தராமையாவை வெற்றிபெறச் செய்யவே தமிழகத்தில் திமுக போராட்டம் செய்து வருகிறது.ஐ.பி.எல்.போட்டியில் எனக்கு தனிப்பட்ட விருப்பம் கிடையாது. ஆனால் அதை நிறுத்தக் கோருவது முட்டாள்தனமானது” எனக் கூறினார். திருச்சியில் செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், செய்தியாளர் மீது மட்டுமல்ல, ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் மீதே தாக்குதல் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
முன்னதாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களது ஒன்றுபட்ட எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழக மக்கள் தங்கள் இல்லங்களில் கறுப்பு கொடி ஏற்றியும், ஒவ்வொருவரும் கறுப்புச்சட்டை அல்லது கறுப்பு பேட்ஜ் அணிய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.