[X] Close

காற்றில் பறந்த பேருந்து மேற்கூரை: பயணிகள் அதிர்ச்சி

Bus-Roof-flew-in-the-air---passengers-shocked

ஸ்ரீவில்லிப்புத்தூரில் அரசு பேருந்தின் மேற்கூரை காற்றில் பறந்து  வயல்வெளியில் விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நேற்று மாலை திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, மகாராஜபுரம், தம்பிப்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் கூமாபட்டியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் அரசு நகர பேருந்து சென்றுகொண்டிருந்தது. பேருந்து வத்திராயிருப்பு பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது பேருந்தின் மேற்கூரை காற்றில் பறந்து வயல்வெளியில் விழுந்தது.இதனால் பயணிகள் மற்றும் சாலைகளில் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.  

இதனையடுத்து பேருந்தை நிறுத்திய நடத்துனர். பொதுமக்களின் உதவியுடன் வயலில் இருந்த மேற்கூரையை எடுத்துச் சென்றனர். காற்றில் பேருந்தின் மேற்கூரை விழுந்ததால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் பேருந்திலேயே காத்திருந்தனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close