ப்ரியா வாரியர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஓமர் லூலூ என்பவரின் இயக்கத்தில் பிரியா வாரியர் நடித்துள்ள மலையாள திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்தப்படத்தின் ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் பிரியாவின் புருவ அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல்கள் ஒரே நாளில் வைரலானது. அத்துடன் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. ஆனால் இந்தப் பாடல் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக ஐதராபாத் காவல் நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் உள்ள ஜின்சி காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்யக்கோரி நடிகை பிரியா வாரியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தான் நடித்துள்ள பாடல் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக உள்ளதாக அவர் கூறியிருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது. அத்துடன் மகாராஷ்டிரா, ஹைதராபாத் காவல்நிலையங்களில் தரப்பட்ட புகார்கள் மீதும் நடவடிக்கை கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ப்ரியா வாரியரின் மனுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் ப்ரியா வாரியர் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பிலிருந்து, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், ப்ரியா வாரியர் நடித்துள்ள பாடலில், முற்றிலும் இஸ்லாமியத்தில் தடை செய்யப்பட்ட கருத்துகள் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் மத உணர்வையும், மனதையும் புண்படுத்தும் வகையில் அந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே ப்ரியா வாரியரின் மனு மீது குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ப்ரியா வாரியர் நடித்துள்ள பாடல், 1978ஆம் ஆண்டு பிஎம்ஏ ஜாபர் என்பவர், முகமதுவின் முதல் மனைவி குறித்து எழுதிய பாடலின் தழுவலாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!