Published : 08,Apr 2018 01:32 PM
யுவராஜ் சிங் சாதனையை உடைத்த ராகுல்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்து அசத்தி இருக்கிறார் ராகுல்.
நேற்று தொடங்கிய ஐபிஎல் போட்டியில் மும்பை அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் கவுதம் காம்பீர் 42 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பந்த் 13 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் மோகித் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் டெல்லி அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தார். 14 பந்துகளில் அரைசதம் கண்ட அவர் 16 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதில் நான்கு சிக்சர்களும், 6 பவுண்டர்களும் அடங்கும். இதற்குமுன் ஐபிஎல்-ல் யூசுப் பதான்,சுனில் நரைன் ஆகியோர் 15பந்தில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.