[X] Close

மத்திய அரசு துரோகம் செய்யவில்லை தாமதிக்கிறது: ரஜினி

The-central-government-has-not-betrayed-the-people-of-Tamil-Nadu---Rajini

தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்யவில்லை தாமதித்து மட்டுமே வருகிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறதா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், ‘தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்யவில்லை ; தாமதித்து மட்டுமே வருகிறது’ அதை விரைந்து செய்ய வேண்டும் என்றார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய சொல்கிறார்களே என்ற கேள்விக்கு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக சி.எஸ்.கே வீரர்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடலாம் என்ற யோசனையையும் தெரிவித்தார்.


 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close