
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது தனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருவதாகவும், மக்கள் சக்தியில் மட்டுமே தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.