[X] Close

அரியரோடு சம்பள உயர்வை பெற்றனர் அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள்..!

admk-mlas-got-hike-salary

தமிழக சட்டபேரவை உறுப்பினர்களின் மாத சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உயர்த்தப்பட்ட சம்பளத்தை அதிமுக எம்எல்ஏக்கள் இந்த மாதம் பெற்றுள்ளனர்.

தமிழக எம்எல்ஏக்களின் சம்பளம் ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே சட்டப்பேரவையில்  அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.  ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியிருந்தார். அதன்படி உயர்த்தப்பட்ட சம்பளத்தை அதிமுக எம்எல்ஏக்கள் இந்த மாதம் முதல் பெற்றுக்கொண்டனர். அதுமட்டுமில்லாமல் இதுவரை வழங்கப்படாமல் இருந்த அரியர் பணத்தோடு சேர்த்து மொத்தமாக 5 லட்சத்தி 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும்போது எம்எல்ஏக்களுக்கும் ஊதிய உயர்வு தேவையற்றது. அதை ஏற்கப் போவதில்லை என சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்போதே தெரிவித்தார். அதன்படி உயர்த்தப்பட்ட சம்பளத்தை திமுக உறுப்பினர்கள் ஏற்கவில்லை. அதேசமயம் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உயர்த்தப்பட்ட எம்எல்ஏக்களின் சம்பளத்தை ஏற்றுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close