[X] Close

கோவா தேர்தல்: முதலமைச்சர் உட்பட 6 அமைச்சர்கள் தோல்வி

6-ministers-lose-in-Goa-elections

கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த 8 அமைச்சர்களில் 6 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.


Advertisement

கோவா மாநிலத்தில் முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கோவா சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில், பாஜக சார்பில் போட்டியிட்ட 8 அமைச்சர்களில் 6 பேர் தோல்வியடைந்துள்ளது அக்கட்சிக்கு பின்னடைவை எற்படுத்தியுள்ளது.

கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர் மன்ட்ரேம் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் தயானந்த் சொப்தேவிடம் தோல்வியை தழுவினார். பாஜக மூத்த தலைவரும் வனத்துறை அமைச்சருமான ராஜேந்திர அர்லேகர் பெர்னெம் தொகுதியில் தோல்வியடைந்தார். புதிதாகத் தொடங்கப்பட்ட கோவா பார்வேர்ட் கட்சியின் வேட்பாளர்கள் 2 அமைச்சர்களை தோற்கடித்துள்ளனர். சியோலிம் தொகுதியில் நீர்வளத்துறை அமைச்சர் தயானந்த் மன்ரேக்கரும், சலிகோ தொகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வினோத் பால்யேக்கரும், கோவா பார்வேர்ட் கட்சியின் வேட்பாளர்களிடம் தோல்வியை தழுவியுள்ளனர். கோவா தொழில் துறை அமைச்சர் மகாதேவ் நாயக் சிரோடா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சுபாஷ் ஷிரோத்கரிடம் தோற்றார். தேர்தலுக்கு முன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.பி கட்சியின் வேட்பாளர் தீபக் தவாலிக்கரும் தோல்வியடைந்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close