Published : 11,Mar 2017 12:12 PM

ராகுல் வாழ்த்து: மோடி நன்றி

Rahul-Congradulates-Modi

பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார். பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ள ராகுல், மக்களின் மனங்களை வெல்லும் வரை காங்கிரஸின் போராட்டம் ஓயாது என்றும் பதிவிட்டுள்ளார். ராகுலின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஜனநாயகம் வாழ்க என்று தனது ட்விட்டரில் பதில் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்