கேட்பது நீரப்பா! தருவதோ சூரப்பா! நடிகர் விவேக் கவிதை!

கேட்பது நீரப்பா! தருவதோ சூரப்பா! நடிகர் விவேக் கவிதை!
கேட்பது நீரப்பா! தருவதோ சூரப்பா! நடிகர் விவேக் கவிதை!

தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க வேண்டும் என நடிகர் விவேக் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை கேட்கிற வேளையில் அம்மாநிலத் தைச் சேர்ந்த சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ளார். 

நம்முடைய சகோதரத்துவத்தை நீர் பிரிப்பதா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இந்த பிரச்னை விரைவில் முடிவுற வேண் டும் என்றும் கவிதை வடிவில் விவேக் பதிவிட்டுள்ளார்.

"நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவதோ சூரப்பா! அண்ணன் தம்பிகள் நாமப்பா! நம்மைப் பிரிப்பது நீராப்பா! அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா! அன்னைக் காவிரி வேணும்ப்பா..!"
-இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com