[X] Close

உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் பும்ரா: பாண்ட் சர்டிபிகேட்!

Jasprit-Bumrah-world---s-No-1-limited-overs-bowler---Shane-Bond

உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார் என்று மும்பை இண்டியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச் சாளர் ஷேன் பாண்ட் சொன்னார்.


Advertisement

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் மும்பையின் பும்ரா, பேட்ஸ்மேன்களை திணறடிப்பார் என்று எதிர்பார் க்கப்படுகிறது. குறிப்பாக முதல் மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்துவதில் பும்ரா வல்லவர். இந்நிலையில், குறுகிய ஓவர் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் பும்ராதான் என்று மும்பை அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளரும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ஷேன் பாண்ட் கூறினார். 


Advertisement

அவர் மேலும் கூறும்போது, ‘குறைந்த ஓவர் போட்டிகளில் பும்ரா சிறந்தவர். நம்பர் ஒன் வீரர் அவர்தான். ஒவ்வொரு அணியும் போட்டியின் கடைசி கட்ட ஓவர்களில் சில பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும். அதில் சிறந்த வீரர் பும்ராதான். அவரை விட வேறு யாரும் இல்லை. கடந்த மூன்று வருடங்களில் அவர் சிறந்த பந்துவீச்சாளராக உருவாகி இருக்கிறார். டெஸ்ட் போட்டி யிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்’ என்றார்.

பும்ரா கூறும்போது, ‘எனக்கு என்ன வேலை கொடுக்கப்படுகிறதோ, அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். பந்துவீச்சைப் பொறுத்தவரை மும்பை அணி, ஒரு வீரரை மட்டுமே நம்பி இல்லை. அனைவரும் அவரவர் பங்கை சரியாகச் செய்வோம் என நினைக்கிறேன்’ என்றார். 


Advertisement

Advertisement
[X] Close